search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமேஷ் பவார்"

    பெண்கள் அணி பயிற்சியாளர் தேர்வு முறை அரசியலமைப்பிற்கு புறம்பானது என்று நிர்வாகக்குழுவில் ஒருவரான டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார். #BCCI
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கும், ஒருநாள் அணி கேப்டனான மிதாலி ராஜி-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ரமேஷ் பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.

    புதிதாக பயிற்சியாளரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான நபர்களை தெரிவிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய் கபில்தேவ் உள்பட மூன்று பேர் கொண்ட தற்காலிக கமிட்டியை அமைத்தது. இதற்கு நிர்வாகக்குழுவில் உள்ள மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ‘‘உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் வேலை, லேதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ-யில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். ஒருதலைபட்சமாக புதிதாக ஒரு கமிட்டியை அமைத்தது அரசியலமைப்பிற்கு எதிரானது. அவமானகரமான நடைமுறையின்படி பயிற்சியாளரை நியமனம் செய்ததை நான் ஆதரிக்கவில்லை’’ என்று தனது ஆதங்கத்தை எடுல்ஜி மெயில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் தேர்வு செய்யப்படாததற்கு ஐபிஎல்-தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின்போது இவருக்கும், மிதாலி ராஜ்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பிசிசிஐ-யில் புகார் அளித்தனர்.

    இதனால் பிசிசிஐ ரமேஷ் பவாரின் பதவியை நீட்டிப்பு செய்யவில்லை. புது பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என விளம்பரம் செய்தது. மேலும், பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட இடைக்கால தேர்வு கமிட்டியை நியமனம் செய்தது.

    இவர்கள் நேற்று 10-க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன், டபிள்யூ.வி. ராமன் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை பரிந்துரை செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன்தான் முன்னணியில் இருந்தார். ஆனால் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படாததற்கு ஐபிஎல் தொடர்தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கேரி கிர்ஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். பிசிசிஐ-யின் விதிப்படி பிசிசிஐ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு அமைப்பில் சம்பளம் வாங்கும் நபர், இன்னொரு அமைப்பில் சம்பளம் வாங்க முடியாது.



    இது ‘இரட்டை ஆதாயம்’ வரைமுறைக்குள் வரும். கேரி கிர்ஸ்டன் ஆர்சிபி-யின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பாததால் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியை இழந்துள்ளார்.

    இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிற்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #BCCI #WVRaman
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடந்தது. இந்த பதவிக்கு கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார், வெங்கடேஷ் பிரசாத் உள்பட 10 பேர்களுக்கிடையே போட்டி நிலவியது. இறுதியில் கிர்ஸ்டன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய மூன்று பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வெஸ்ட்இண்டீஸில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜிக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலி ராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார்.

    ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலியும், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார்.

    அத்துடன் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளின்படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டதுபோல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



    அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார், டபிள்யூ.வி. ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள்.
    தேசிய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அப்ளிகேசன் வெளியிட்டுள்ள நிலையில், ரமேஷ் பவாருக்கு ஆதரவாக வீராங்கனைகள் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர். #BCCI #RameshPowar
    இந்திய தேசிய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை எதிர்கொண்டது.

    அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது. லீக் போட்டியின்போது இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருது பெற்ற மிதாலி ராஜ் அரையிறுதியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணம் ரமேஷ் பவாருக்கும், மிதாலி ராஜிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் காரணம் என்று கூறப்பட்டது.

    இதற்கிடையில் நவம்பர் 30-ந்தேதியுடன் ரமேஷ் பவார் பதவிக்காலம் முடிவடைந்தது. அன்று மாலையே பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் பெண்கள் அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஹர்மன்ப்ரீத் கவும், மற்றொரு வீராங்கனை மந்தனா ஆகியோர் மீண்டும் ரமேஷ் பவாருக்கு பதவி வழங்குங்கள் என்று பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
    மிதாலி ராஜ் விவகாரத்தில் ரமேஷ் பவாரை நீக்கியதுபோல், ரவி சாஸ்திரியை நீக்குவீர்களா? என்று மதன் லால் கேள்வி எழுப்பியுள்ளார். #TeamIndia
    வெஸ்ட் இண்டீஸில் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அனுபவம் வாய்ந்த மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.

    அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் காயத்தால் களம் இறங்கவில்லை. அதன்பின் காயம் சரியான பின்பும் அரையிறுதி போட்டியில் களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் விமர்சனம் எழும்பியது. அப்போதுதான் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் மிதாலி ராஜிற்கும் இடையில் இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த விவகாரத்திற்கிடையே, நேற்று முன்தினத்துடன் ரமேஷ் பவாரின் பதவிகாலம் முடிவடைந்தது. அதற்குள் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்நிலையில் இந்திய ஆண்கள் தேசிய அணியில் ரவி சாஸ்திரி ஒரு வீரரை வெளியே உட்கார வைத்துவிட்டார் என்பதற்கு, அவரை பதவியில் இருந்து நீக்கிவிடுவீர்களா? என்று முன்னாள் வீரர் மதன்லால் கேள்வி எழுப்பிள்ளார்.



    இதுகுறித்து மதன் லால் கூறுகையில் ‘‘நீங்கள் பயிற்சியாளரை நீக்கினால், அவர் டம்மியானவர் என வீரர்கள் நினைக்க தோன்றிவிடும். பயிற்சியாளர் அணியின் ஒரு பகுதி. அவருடன் எடுக்கப்படும் முடிவுகளை அணி பின்பற்ற வேண்டும். ரமேஷ் பவார் எப்போதுமே அணி வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புவார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதில் ஒரு பகுதி. அப்படி இருக்கையில் ரமேஷ் பவார் மற்றும் ஏன் டார்கெட்? செய்யப்படுகிறார். தேர்வாளர்களும் அதில் ஒரு பகுதிதான். பவாரை நீக்கியது தேவையில்லாதது. இப்படிபட்ட விஷயத்தால் ஆட்டம் முன்னோக்கிச் செல்லாது.

    நாளை ரவி சாஸ்திரி யாரவது ஒரு வீரரை வெளியில் உட்கார வைத்துவிட்டா், நீங்கள் அவரை பதவியில் இருந்த நீக்குவீர்களா?. அது நடக்காத விஷயம். பயிற்சியாளர்கள் எப்போதுமே நெருக்கடிக்குள் இருப்பவர்கள்’’ என்றார்.
    மிதாலிராஜ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. #MithaliRaj
    வெஸ்ட் இண்டீஸில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

    இதற்கு பயிற்சியாளர் ரமேஷ்பவார்தான் காரணம் என்று மிதாலிராஜ் குற்றம்சாட்டினார். அவர் தன்னை அவமானப்படுத்தி வேண்டுமென்றே நீக்கினார் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த ரமேஷ்பவார், மிதாலிராஜ் தன்னை தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிரட்டி நெருக்கடி கொடுத்தார் என்று தெரிவித்தார்.



    இருவரின் இந்த மோதல்போக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவியின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி காலம் நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
    ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனைக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் இது எனது வாழ்க்கையின் கருப்பு நாள் என்று கூறியிருக்கிறார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    புதுடெல்லி:

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் வேண்டுமென்றே தன்னை நீக்கியதாகவும், பலமுறை அவர் அவமதித்ததாகவும் 35 வயதான மிதாலிராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். மேலும் ‘பயிற்சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ரன்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரிடம் 20 ஓவர் கிரிக்கெட்டுக் குரிய உத்வேகமும் இல்லை’ என்பது போன்ற விஷயங்களையும் சுட்டிகாட்டி அறிக்கையை சமர்பித்தார்.



    எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டினார். அத்துடன் பயிற்சியாளருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கிறார். அணியின் நலனை பார்க்காமல் தனிப்பட்ட சாதனை மீதே அவரது நோக்கம் அதிகமாக உள்ளது. 50 ஓவர் போட்டி அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் பவார் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    ரமேஷ் பவாரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு:-

    என்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் (பவாரின் கருத்து) மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று, என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது, எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மிதாலி அதில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே மிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டு காலம் பங்களிப்பை அளித்துள்ளார். நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார். ஒரு ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் அடுத்த ஆட்டத்திற்குள் குணமடைந்து தயாராகி விட்டார். ஆனாலும் அரைஇறுதிப்போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதே சூழலை அப்படியே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். விராட் கோலி ஒரு ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்து நாக்-அவுட் சுற்றுக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்கும் போது அவரை சேர்க்காமல் விட்டு விடுவார்களா?

    எப்போதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களுக்கு சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆட்டங்களில் மிதாலிராஜ் போன்ற வீராங்கனையின் அனுபவம் அவசியமாகும். எந்த காரணம் சொன்னாலும் மிதாலியை நீக்கியது தவறு தான்.’ என்றார். #DarkestDay #MithaliRaj #RameshPowar
    மிதாலிராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். #MitaliRaj #RameshPowar #BCCI
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-



    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார். மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
    இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ரமேஷ் பவார் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #RameshPowar #WomenCricketTeam
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு துஷ்கர் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

    பரோடா முன்னாள் ஆல்ரவுண்டரான அவர் மீது சீனியர் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். அவரது பயிற்சி முறை சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தன. இதைதொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சரியான பயிற்சியாளர் அமையும் வரை அவரே அந்த பொறுப்பில் தொடர்வார். #RameshPowar #WomenCricketTeam
    ×